திருப்பதிக்கு பழநியில் இருந்து 7 டன் பூக்கள் அனுப்பி வைப்பு

பழநி:  திருப்பதி பிரமோற்சவத்திற்காக பழநியில் இருந்து 7 டன் பூக்கள் பஸ் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள புஷ்ப கைங்கர்ய சபா சார்பில், திருப்பதி பிரமோற்சவ விழாவுக்கு கடந்த 17 ஆண்டுகளாக பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு நவராத்திரி பிரமோற்சவத்திற்காக 10 நாட்களுக்கு சுமார் 7  டன் பூக்கள் இவ்வமைப்பின் சார்பில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக நேற்று கிழக்கு ரதவீதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் இருந்து பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு புஷ்ப கைங்கர்ய சபா அமைப்பின் தலைவர்  கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து தலைமை வகித்தார்.     பழநி கோயில் இணை ஆணையர் ஜெயச்சந்திரபானு ரெட்டி பூக்களை வழங்கி துவக்கி வைத்தார். மரிக்கொழுந்து, மேரி கோல்டு சிவப்பு மற்றும் வெள்ளை பூக்கள், விரிச்சி, சாமந்தி வகை பூக்கள் நாள்தோறும் 700 கிலோ வீதம் 10  நாட்களுக்கு சுமார் 7 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Related Stories: