ஜனாதிபதிக்கு வழங்கும் மலர்கொத்தில் பிளாஸ்டிக் இருக்காது: ஜார்கண்ட் அரசு தகவல்

ராஞ்சி: ‘ஜார்கண்ட் வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை வரபேற்பதற்காக அளிக்கும் மலர்கொத்தில் பிளாஸ்டிக்கு பதிலாக காகிதம் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக நாளை ஜார்கண்ட் செல்கிறார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக வருகிறார். ராஞ்சியில் உள்ள பிரிசா முண்டா விமான நிலையத்தில் மலர்கொத்து ெகாடுத்து அவர் வரவேற்கப்படுகிறார். மலர்கொத்தில் பிளாஸ்டிக்கு பதிலாக காகிதம் சுற்றப்பட்டு இருக்கும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

 சனியன்று புவனேஷ்வரில் இருந்து ராஞ்சி வரும் ஜனாதிபதி, ராஜ்பவனில் தங்குகிறார். பின்னர், ஞாயிறு அன்று கும்லாவில்  தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்படும் விகாஸ் பாரதி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். அதன் பின்னர், தியோகர் செல்லும் அவர் பைத்யநாத் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். 30ம் தேதி ராஞ்சி பல்கலைக் கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்கிறார்.

Related Stories: