போக்குவரத்து விதிமீறல் குற்றங்களை கட்டுப்படுத்தியதில் தமிழகம் முன்னிலை: சாலை விபத்துகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 29% குறைவு

சென்னை: மிக அதிக அபராதங்களை வசூலிக்காமலேயே ஏற்கனவே இருந்த சட்டங்களை அமல் படுத்துவதன் மூலமே போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்திய மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில், மோட்டார் வாகன திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்ததையடுத்து, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் படி,  போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிப்பு, வாகன பதிவு கட்டணம் உயர்வு,

மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வு போன்றவை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இந்த நடைமுறைக்கு முன்பாகவே தமிழகம் போக்குவரத்து விதி மீறல் குற்றங்களை சிறப்பான முறையில் கட்டுப்படுத்த தொடங்கியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2016-ம் ஆண்டு விபத்துகளால் தமிழகத்தில் 17, 218 பேர் உயிரிழந்த நிலையில் 2018-ம் ஆண்டு பலி எண்ணிக்கை 12, 216-ஆக குறைந்திருக்கிறது. தமிழக காவல்துறையின் பல்வேறு நடவடிக்கைகளால் சாலை விபத்துகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 29% குறைந்துள்ளது.

2016- ஆண்டோடு ஒப்பிடுகையில் 2018-ம் ஆண்டு சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை சண்டிகரில் 35% குறைந்துள்ளது. பீகாரில் 37 சதவீதமும், ஒடிசாவில் 19 சதவீதமும் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Related Stories: