சென்னையில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும்,  வெப்பச்சலனத்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும்   வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் அரை மணி நேரமாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பெருங்குடி, தரமணி, வேளச்சேரி, திருவான்மியூர், திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, பெசன்ட் நகர்,  அடையாறு, அயனாவரம்,சூளைமேடு, கோடம்பாக்கம், கீழ்பாக்கம், ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர் உள்ளிட்டகனமழை பெய்து வருகிறது. பெய்து வரும் கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான  சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: