10 ஆண்டுகளுக்கு பிறகு சென்செக்ஸ் ஒரே நாளில் 2000 புள்ளிகள் உயர்வு : ராக்கெட் வேக உயர்வால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 6 லட்சம் கோடி லாபம்

மும்பை : இந்திய பங்குச் சந்தைகளில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சென்செக்ஸ் ஒரே நாளில் 2000 புள்ளிகள் உயர்ந்தது. இதனால் முதலீட்டாளர்கள் ரூ. 6 லட்சம் கோடி வரை லாபம் அடைந்துள்ளனர். கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் உள்ளிட்ட பலவேறு காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகின்றனர். காலையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கிய நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி சலுகைகளை அறிவித்தார்.

அப்போது உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்ரேட் வரி விகிதங்கள் குறைக்கப்படுமென நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்திருக்கின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டான சென்செக்ஸ் 2000 புள்ளிகள் வரை உயர்ந்து 38,014 புள்ளிகளிலும் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 569 புள்ளிகள் அதிகரித்து 11,274இல் வணிகம் நிறைவு பெற்றது. பங்குச் சந்தை உயர்வால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 6 லட்சம் கோடி வரை லாபம் கிடைத்துள்ளது.

Related Stories: