விழுப்புரம் அருகே நன்னாடு கிராமத்தில் தனியார் பள்ளிகளை மிஞ்சிய அரசு தொடக்கப் பள்ளி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே நன்னாடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனியார் பள்ளிகளை விட அதிக வசதியுடன் மாணவர்கள் படித்து வருகின்றனர். விழுப்புரம் நகரில் இருந்தும் மாணவர்கள் இப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து அப்பள்ளிக்கு சென்றிருந்தோம். அப்பள்ளியின் தலைமை ஆசிரியை புவனேஸ்வரியிடம் பள்ளியைப் பற்றி கேட்டபோது: இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 67 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இம்மாணவர்கள் அரசு வழங்கிய சீருடையை வாரத்தில் 3 நாட்களும், பள்ளி நிர்வாகம் வடிவமைத்த சீருடையை 2 நாட்களும் அணிந்து வருகின்றனர். காலையில் இறைவணக்கத்தில் யோகா வகுப்புகள், அன்றைய செய்தி சுருக்கம் என சொல்லப்பட்டு வகுப்புகள் தொடங்கப்படுகிறது.

இப்பள்ளியில் நூலகம், அறிவியல் ஆய்வகம், உள்விளையாட்டு அரங்கம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மாணவர்கள் அமர இருக்கைகள், ஒரு கணினி இணைய வசதியு டன் உள்ளது. மேலும் வியாழக்கிழமைதோறும் சுக்கு, மிளகு, திப்பிலி மற்றும் மூலிகைகள் கலந்து காய்ச்சப்பட்ட பானம் வழங்கப்ப டுகிறது.மாணவர்களின் பிறந்த நாளில் தமிழ் முறைப்படி தமிழில் வாழ்த்துகள் சொல்லவும், சாக் லெட், கேக்குக்கு பதிலாக கடலை மிட்டாய், எள்ளுருண்டை அளிக்கவும் சொல்லியுள்ளோம். பொதுஅறிவில் ஒவ்வொரு நாளும் முதலிடம் பிடிப்போருக்கு ஸ்மைலி பேட்ச் அணிவிக்கிறோம். என்னோடு சேர்த்து இங்கு 3 ஆசிரியைகள் பணியாற்றுகிறோம். சிலபஸை கடந்து செயல்வழிக் கல்வி மூலம் பாடம் எடுக்கிறோம்.

இப்பள்ளியில் உள்ள வசதிகளில் பெரும்பாலும் முன் னாள் மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் அளித்ததாகும். விழுப்புரத்தில் அரசுப் பள்ளியில் எல்.கே.ஜி வகுப்புகள் தொடங்கிய வுடன் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க இப்பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பை தொடங்கி நாங்களே ஒரு ஆசிரியையை நியமித்துள்ளோம். விழுப்புரத்திலிருந்து 3 மாணவர்கள் இங்கு வந்து படிக்கிறார்கள். கல்வித்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு இப்பள்ளியை நடத்தி வருகிறோம் என அப்பள்ளியின் தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார்.

Related Stories: