தென்தாமரைகுளம்: தென்தாமரைகுளம் அருகே காட்டு விளையிலிருந்து அகஸ்தீஸ்வரம் செல்லும் பிரதான சாலை ஒன்று உள்ளது. காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டுமல்லாது இரவு நேரங்களிலும் இந்த சாலை மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும் சாலையாகும். இந்த சாலை பழுதுபட்டு வெகுநாட்கள் ஆகியும் எந்த ஒரு பராமரிப்பும் இன்றி அப்படியே போடப்பட்டுள்ளது. சாலையை ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பயன்படுத்துகின்றனர். குறுகிய நேரத்தில் கன்னியாகுமரி செல்ல பல்வேறு கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்துவதால் எப்பொழுதும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் எப்போதும் வந்து கொண்டே இருக்கும். இது தவிர பல தனியார் பள்ளிகளின் வேன்களும் இந்த பகுதி வழியாக வருகின்றன.