இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி; அமித்ஷா... தமிழத்தில் இதுவரை நடைபெற்ற மொழிப்போர்

இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அரங்கில் இந்தியாவில் அடையாளப்படுத்த முடியும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தி தினத்தை முன்னிட்டு ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். இந்தி மொழி திணிக்கும் போது தமிழகத்தில் மொழிப்போர் நடந்துள்ளது. அதன் விவரத்தை தற்போது பார்ப்போம்...

* 1938ல் ராஜாஜி ஆட்சியில் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்ட போது தமிழகத்தில் முதல் மொழிப் போராட்டம் வெடித்தது. மறைமலையடிகளார், சோமசுந்தர பாரதியார் போன்றோர் வழி நடத்தினர். இரு இளைஞர்கள் சிறையில் மடிந்தனர்.

* இரண்டாம் கட்டமாக 1948ம் ஆண்டு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இந்தி கட்டாயம் என்று மீண்டும் முயற்சித்தார். அப்போதும் எதிர்ப்பு வலுவாக கிளம்ப, திணிப்பு கைவிடப்பட்டது.

* 1950ல் அரசியல் நிர்ணய சபையில் ஆட்சிமொழி பற்றி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது இந்திக்கும், ஆங்கிலத்துக்கும் சம வாக்குகள் கிடைத்தன. நடுநிலை பேன வேண்டிய ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத், தமது தாய்மொழி பற்றின் காரணமாக இந்திக்கு தன் வாக்கை அளித்து ‘இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி’ என்று அறிவித்தார்.

* மூன்றாம் கட்டமாக 1952 தொடங்கி 1965ம் ஆண்டு வரை இந்தியை கட்டாயமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, 1964 -65ல் தீவிரமடைந்தது. மாநிலம் முழுக்க முக்கியத் தலைவர்கள் தலைமையேற்று தொடர் போராட்டங்களை நடத்தினர். தலைவர்கள் அனல் பறக்கும் பேச்சுக்களும் போராட்ட களமும் தமிழ்நாட்டை அதிரச் செய்தது. போராட்டத்தை தடுக்க, தலைவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். போராட்டத்தை வழி நடத்த வழியின்றி… அடுத்து என்ன நடக்கும் என்று திகைத்து நின்ற போது, வரலாற்று திருப்புமுனையாக மாணவர்கள் போராட்டக் களத்திற்கு வந்தனர். இந்தித் திணிப்பின் உள்நோக்கமும் அதன் பாதகங்களும் மாணவர்களை கிளர்ந்தெழச் செய்தது.

* 1965- ல் இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் அரசுப்பணிகளில் இணைமொழியாக இருக்கும் என்ற உறுதிமொழி அளித்தார். இந்த உறுதிமொழியை அடுத்து மாணவர் போராட்டம் ஓய்ந்தது.

* 1938 முதல் உச்ச கட்டத்தில் இருந்த 1965ம் ஆண்டு வரையிலான காலத்தில் ஏராளமானோர் தமிழ் மொழிக்காக உயிரிழந்தனர்.

* மொழிப்போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் ஜனவரி 25ம் தேதி மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது. மொழிப்போர் தியாகிகள், அவர்களின் குடும்பத்தாருக்கு மாதாந்திர மதிப்பூதியம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை அரசு வழங்கியுள்ளது.

Related Stories: