அமமுகவில் நடிகர் செந்தில் உள்பட 5 பேருக்கு அமைப்பு செயலாளர் பதவி: டிடிவி.தினகரன் அறிவிப்பு

சென்னை: அமமுகவில் நடிகர் செந்தில் உள்பட 5 பேருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளராக கடம்பூர் மாணிக்கராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தேர்தல் பிரிவு செயலாளராக ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தமிழனுடன் இணைந்து பணியாற்றுவார். அமைப்புச் செயலாளர்களாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சிவா ராஜமாணிக்கம், தேனியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ டாக்டர் கதிர்காமு, பேராவூரணியைச் சேர்ந்த தேவதாஸ், தூத்துக்குடியைச் சேர்ந்த ஹென்றி தாமஸ், நடிகர் செந்தில் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.மருத்துவரணி செயலாளராக பரமக்குடி முன்னாள் எம்எல்ஏ டாக்டர் முத்தையா, இணைச் செயலாளராக குன்னூர் செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜ், தெற்கு மாவட்டச் செயலாளராக டாக்டர் வி.புவனேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அமமுக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவர்களில், மாணிக்கராஜா அமைப்புச் செயலாளராகவும், தென் மண்டல பொறுப்பாளராகவும் இருந்தார். தேர்தல் தோல்வி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக திமுக மற்றும் அதிமுகவில் இணைந்ததற்கு, மாணிக்கராஜாதான் காரணம் என்று பலரும் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த குற்றச்சாட்டு குறித்து டிடிவி.தினகரன் பதில் அளிக்காமல் இருந்து வந்தார்.

தற்போது, அவர் அந்த பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, டம்மியான தேர்தல் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் எம்எல்ஏக்களாக இருந்து டிடிவி. தினகரனால் பதவி இழந்த டாக்டர் முத்தையா, கதிர்காமு ஆகியோருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நடிகர் செந்தில், அதிமுகவில் வெறும் பேச்சாளராகவே இருந்தார். தற்போது அவருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த ெஹன்றியும் பதவி பறிக்கப்பட்டு, அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: