தாம்பரம் அருகே போலி ஆவணம் தயாரித்து கோவை பெண் தொழிலதிபருக்கு 5.50 கோடிக்கு நிலம் விற்பனை : அதிமுக பிரமுகர் உட்பட 4 பேர் கைது

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோவையை சேர்ந்த பெண் தொழிலதிபர் விசித்ரா என்பவர் புகார் ஒன்று அளித்தார். இந்த புகாரில், தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூர் தேவாலயம் அருகே 1.8 ஏக்கர்  நிலத்தை 5.50 கோடிக்கு வாங்கினேன். அந்த நிலத்தை சுற்றி வேலி அமைக்கும் பணியை மேற்கொள்ளும் போது, சிலர், ‘‘நாங்கள் வாங்கிய நிலத்தில் நீங்கள் எப்படி வேலி அமைப்பீர்கள்?’’ என்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த நான் நிலத்தை விற்பனை செய்த கிழக்கு தாம்பரம் இரும்புலியூர் சுத்தானந்த பாரதி தெருவை சேர்ந்த அதிமுக பிரமுகர் மாணிக்கத்திடன் கேட்டபோது முறையான பதில் இல்லை. எனவே வேறு ஒருவருக்கு  விற்பனை செய்த நிலத்தை போலி ஆவணம் மூலம் தனக்கு 5.50 கோடிக்கு விற்பனை செய்த விசாரித்ததில் தெரியவந்தது. எனவே மாணிக்கம் மற்றும் நிலத்தை விற்பனை செய்ய உடந்தையாக இருந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.

அதன்பிடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அதிமுக பிரமுகரான மாணிக்கம் என்பவரின் உறவினர் எட்வின் (30) மற்றும் மணி, வசந்த், முத்து, குமார் ஆகியோர் மூலம்  போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதே நிலத்தை பெண் தொழிலதிபர் விசித்ரா போல் ஒரே நிலத்தை 2 பேருக்கு பல கோடிக்கு போலி ஆவணம் மூலம் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிமுக பிரமுகரும் கிழக்கு தாம்பரம் கூட்டுறவு சங்க தலைவராக உள்ள மணிக்கம், வசந்த், முத்து, மணி, குமார் ஆகிய 5 பேரை அதிரடியாக கைது செய்தனர். தலைமறைவாக உள்ள  எட்வினை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: