ஊத்தங்கரை அருகே கணவன், மனைவி, கைக்குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கணவன், மனைவி, கைக்குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ராமகிருஷ்ணபதி என்ற ரயில்வே தண்டவாளத்தில் காலையில் 3 பேரின் சடலம் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அத்தகவலை அடுத்து சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுவரை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

Advertising
Advertising

ஆனால் இறந்து போனது கணவன், மனைவி, குழந்தை என்பது தெரியவந்துள்ளது. குழந்தையின் கையில் வந்து மருத்துவத்துக்காக சிகிச்சை பெற்றத்துக்கான அடையாளம் இருக்கிறது. இதுகுறித்து பார்க்கும் போது சேலத்தில் இருந்து ரயில் சென்றதாகவும், இவர்கள் சேலத்தில் இருந்து குழந்தையை அழைத்து வரும் போது படிக்கட்டில் பயணம் செய்து வந்ததாகவும் அதிலிருந்து தவறி விழுந்திருக்க கூடலாம் என்ற நிலையில் தகவலும் வருகிறது.

இதுகுறித்து மேலும் சம்பவம் குறித்த விஷயங்களை ரயில்வே போலீசார் வந்து விசாரித்தால் மட்டுமே இதன் உண்மை நிலை தெரியவரும். தற்கொலை செய்துகொண்டதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் அல்லது இவர்கள் தவறி விழுந்து இறந்தார்களா என ரயில்வே போலீசிடம் இருந்து உரிய தகவல் வந்தால் மட்டுமே தெரிவிக்கப்படும். இதுகுறித்து மேலும் விசாரணையில் இருக்கிறது. முதற்கட்ட தகவல் சந்தேகத்தின் பேரில் தற்கொலையா அல்லது தவறி விழுந்தார்களா என்பது மட்டுமே தெரியவந்துள்ளது.

Related Stories: