மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா பிட்டுக்கு சுந்தரேஸ்வரர் மண் சுமந்த லீலை கோலாகலம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சுந்தரேஸ்வரர், பிட்டுக்கு மண் சுமந்த லீலை கோலாகலமாக நேற்று நடந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா, சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களை மையமாகக் கொண்டு ெகாண்டாடப்படுகிறது. சுந்தரேஸ்வரர் பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிளையாடல் நேற்று நடந்தது. இதற்காக நேற்று காலை 6 மணிக்கு சுவாமி சுந்தரேஸ்வரர், பிரியாவிடை, மீனாட்சி அம்மனுடன் மேள, தாளங்கள் முழங்க கோயிலில் இருந்து புறப்பாடாகி, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு புட்டுத்தோப்பு பகுதியில் உள்ள சொக்கநாதர் கோயிலுக்கு வந்தனர்.

அதிகாலையில் இருந்தே பக்தர்கள் புட்டுத்தோப்பில் குவிந்தனர். பலவகையான புட்டு விற்பனை நடந்தது. பகல் 1.30 மணிக்கு மேல் சொக்கநாதர் கோயிலில் ‘பிட்டுக்கு மண் சுமந்த லீலையை’’ பட்டர்கள் அரங்கேற்றினர். அப்போது சுவாமி சுந்தரேஸ்வரர் தங்கக்கூடையில் மண் சுமக்கும் கோலத்தில் பிரியாவிடையுடன் காட்சியளித்தார். பட்டர்கள் சுவாமியாகவும், மன்னனாகவும் வேடமிட்டு திருவிளையாடலை அரங்கேற்றினர். அளந்து விட்ட கரையை அடைக்காமல் சுவாமி தூங்குவது, அதற்காக மன்னர் பொற்பிரம்பால் சுவாமியை அடிப்பது ஆகியவை நிகழ்த்தி காட்டப்பட்டன.

Related Stories: