எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பு 18-19 மாதங்களில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்: ரஷ்ய துணை பிரதமர்

ரஷ்யா: எஸ்400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு 18 அல்லது 19 மாதங்களில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று ரஷ்யாவின் துணை பிரதமர் யூரி போரிசோ தெரிவித்துள்ளார். தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை சுமார் 543 கோடி டாலர் மதிப்பில் வாங்குவதற்காக ரஸ்யாவுடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதனை தொடர்ந்து இந்த பாதுகாப்பு சாதனம் ரோடரில் இருந்து கிடைக்கும் தகவல்களை பெற்று தானாகவே இலக்கை குறி வைத்து தாக்கும் திறன் கொண்டது. மேலும் நீண்ட தூரத்தில் உள்ள ஏவுகணைகள், விமானங்கள், ட்ரோன்கள் போன்றவற்றை தாக்கும் வல்லமை கொண்டது.

இந்த பாதுகாப்பு கருவியை வாங்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் ரஷ்யாவின் ஆயுதத்தை விட சிறப்பான தங்களது ஆயுதத்தை வாங்குமாறு இந்தியாவை வலியுறுத்தியது. எனினும் இந்த பாதுகாப்பு கருவியை ரஷ்யாவிடம் வாங்குவதற்கு அண்மையில் இந்தியா முன்பணம் செலுத்தியது. இந்த நிலையில் இந்தியாவிடம் இருந்து முன்பணம் பெறப்பட்டு விட்டதால் ஏற்கனவே திட்டமிட்டபடி 18 அல்லது 19 மாதங்களில் எஸ்400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு வழங்கப்படும் என்று ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிசோ தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் ரஷ்யா சென்றிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: