அணைகள் பிரச்னை குறித்து தமிழக, கேரள முதல்வர்கள் 26ம் தேதி பேச்சுவார்த்தை

சூலூர்: கோவை மாவட்டம்  சூலூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஓணம் பண்டிகை விழா சூலூரில் நேற்று நடந்தது. விழாவில் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி பேசுகையில், ‘‘தமிழகத்தில் 30 சதவீதத்திற்கும்  அதிகமாக கேரள மக்கள் வாழ்கின்றனர். கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் சிறுவாணி, முல்லைப் பெரியாறு, பாண்டியாறு, புன்னம்புழா, பரம்பிக்குளம் ஆழியாறு, ஆனைமலையாறு, நல்லாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்து வருகிறது.  இது குறித்து வரும் 26ம் தேதி தமிழ்நாடு மற்றும் கேரள முதல்வர்கள் சந்தித்து பேச உள்ளனர். அப்போது அனைத்து பிரச்னைகளுக்கும் சுமூக தீர்வு ஏற்படும்,’’ என்றார்.

Related Stories: