இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்து சிபிஎஸ்இ அலுவலகம் இன்று முற்றுகை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை:கேந்திரிய வித்யாலயா என்பது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட மத்திய அரசுப் பள்ளியாகும். இஸ்லாமியர்கள் குறித்து கேந்திரிய வித்யாலயா ஆறாம் வகுப்பு பாடத்தில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதே போன்று இஸ்லாமிய பெண் குழந்தைகள் ஏன் பள்ளிகளுக்கு வருவதில்லை என்ற கேள்விக்கு, சோம்பேறிகள், கஞ்சதனமானவர்கள், மிகவும் ஏழ்மைநிலையில் இருப்பதால் பள்ளிக்கு அனுப்புவதில்லை என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.  பள்ளி மாணவர்கள் மனதில் மதம், இனத்தை பற்றி விஷ விதைகளை விதைக்கும் செயலில் மத்திய மதவாத பாஜ அரசு இறங்கியுள்ளது வன்மையாக கண்டிக்கதக்கது.

 இஸ்லாம் மற்றும் தலித் சமுதாயம் பற்றிய கருத்துக்களை உடனடியாக கேந்திரிய வித்யாலயா நீக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று சென்னை அண்ணா நகரில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த  உள்ளோம், இதுபோன்ற கேள்வி, பதில்களை தயாரித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் கேந்திரிய வித்யாலயா உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: