பிரேக்கை அழுத்தியதன் காரணமாக விக்ரம் கட்டுப்பாட்டை இழந்ததா ?: இஸ்ரோ வல்லுநர்கள் ஆய்வு

பெங்களூரு: சந்திரயான்-2 வில் இருந்து பிரிந்து நிலவில் தரை இறங்கிய விக்ரம் கலம், 2.கி.மீ. அருகாமையில் சென்றுக்கொண்டிருந்த போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதற்கான காரணத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். நாசாவிடம் இதற்கான தகவல்களை கேட்டு பெற முயற்சிகள் மேற்கொள்ளபட்ட போதும் கேள்விகளுக்கான விடை கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடைசி கட்ட தரையிறக்கும் முயற்சியின் போது மென்மையாக தரையிறக்க விக்ரமின் வேகத்தை படிப்படியாக குறைக்க பிரேக் போட பட்டதில் தவறு நிகழ்ந்து இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

கூடுதலான பிரேக் அழுத்தம் காரணமாக விக்ரம் கலம் கட்டுப்பாட்டை இழந்து தவறான இடத்தில் திசை மாறி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. காருக்கு சடன் பிரேக் போடும்போது கட்டுப்பாட்டை இழந்து திசை மாறுவது போல தான் இதுவும் என்றும் அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக இஸ்ரோ அறிவிப்பு வெளியிட வில்லை. பெறப்பட்ட ஆவணங்களையும் ஆர்பிட்டர் அனுப்பும் தகவல்களையும் வைத்து தான் முடிவு எடுக்க முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Related Stories: