அரசு வங்கிகள் இணைப்பால் வாடிக்கையாளர் சேமிப்பு கணக்கு எண்கள் மாறுமா?

புதுடெல்லி: கடந்த வாரம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில், 10 பொதுத்துறை வங்கிகள் நான்கு பெரிய வங்கிகளாக இணைக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். அதன்படி, பெரிய வங்கிகளுடன் இணைக்கப்படும் வங்கிகளின் வாடிக்கையாளர் சேமிப்பு கணக்கு எண்கள் மாறும் என்று தெரிகிறது.வங்கிகள் இணைப்பின்படி, பெரிய வங்கியுடன் மற்ற சிறிய வங்கிகள் இணைக்கப்படும். உதாரணமாக, விஜயா பாங்க், தேனா பாங்க் ஆகிய இரு வங்கிகளும் பிரதான வங்கியான பாங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்படுகிறது. இணைப்பிற்கு பின்னர், விஜயா பாங்க், தேனா பாங்க் ஆகியவை பரோடா வங்கியின் நிர்வாகத்தின்கீழ் வந்துவிடும். இதனால், இணைக்கப்படும் வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கு எண்கள் மற்றும் வாடிக்கையாளர் அடையாள எண் (ஐடி) ஆகியவை எல்லாம் மாறும் என்று தெரிகிறது. பிரதான வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும் கூறப்படுகிறது.வங்கிகள் இணைப்பு பணி இந்த நிதியாண்டிற்குள் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

எவை எல்லாம் மாறும்?

* சேமிப்பு கணக்கு எண், வாடிக்கையாளர் அடையாள எண் (ஐடி) ஆகியவை மாறலாம். வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிகளில் தற்போதைய முகவரி, இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை புதுப்பித்து வைத்துக் கொள்ளவும். வங்கிகள் இணைக்கப்பட்டவுடன் வங்கியிடமிருந்து சேமிப்பு கணக்கு எண், கஸ்டமர் ஐடி போன்ற விவரங்கள் அனுப்பப்படும். மேலும் வாடிக்கையாளர் ஒருவர் ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 2 வங்கிகளிலும் சேமிப்பு கணக்கு வைத்து இருந்தால், அந்த வாடிக்கையாளருக்கு இரண்டு சேமிப்பு கணக்குகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு கஸ்டமர் ஐடி எண் மட்டுமே வழங்கப்படும்.

* வங்கியில் மாத சம்பளம் போடவும் வங்கி கணக்கில் இருந்து கடனுக்கான தொகையை செலுத்தவும் புதிய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

* வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பழைய வங்கியின் காசோலைகளை நிதி நிறுவனங்களுக்கு கொடுத்து இருந்தால், அவற்றை எல்லாம் திரும்பப் பெற்று புதிய சேமிப்பு கணக்கு அடிப்படையில் வாங்கிய காசோலைகளை கொடுக்க வேண்டும். மேலும் கணக்கு வைத்துள்ள வங்கியில் தொடர்பு கொண்டு எந்தெந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெளிவாகக் கேட்டு தெரிந்து அதன்படி செய்தால் பண பரிவர்த்தனையில் எந்த பிரச்னையும் வராது.

* புதிய ஏடிஎம் கார்டுகள் தருவார்களா? அல்லது பழைய வங்கி கொடுத்த ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாமா? என்பது பற்றி வங்கியில் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

Related Stories: