அகில இந்திய கல்லூரிகளுக்கு இடையேயான மாரத்தான் போட்டிக்கு மாணவ, மாணவிகள் தேர்வு

கோபி: அகில இந்திய கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டியில் பங்கேற்பதற்கான போட்டி இன்று கோபியில் நடந்தது. இதில் பாரதியார் பல்கலை அளவில் கோபி, பொள்ளாச்சி, கோவையை சேர்ந்த மாணவ, மாணவிகள் 12 பேர்  பேர் தேர்வு செய்யப்பட்டனர். அகில இந்திய அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி வரும் அக்டோபரில் நடக்கிறது. மாணவர்களுக்கான போட்டி மங்களூரிலும், மாணவிகளுக்கான போட்டி ஆந்திராவிலும் நடக்கிறது. இதில் நாட்டிலுள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகங்களை சேர்ந்த தலா 6 மாணவர்கள், 6 மாணவிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாரதியார் பல்கலை அளவில் மாணவ, மாணவிகளை தேர்வு செய்யும் 10 கி.மீ. அளவிலான மாரத்தான் போட்டி  இன்று கோபியில் நடந்தது.

இதில் பாரதியார் பல்கலைக்குட்பட்ட 35 கல்லூரிகளை சேர்ந்த 126 மாணவிகளும், 76 மாணவர்களும் பங்கேற்றனர். கோபி கலை, அறிவியல் கல்லூரியில் துவங்கிய போட்டியை இந்த கல்லூரியின் முதல்வர் தியாகராஜூ துவக்கி வைத்தார்.  போட்டிகள் மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் நடந்தது. போட்டி புதுப்பாளையத்தில் முடிந்தது. இதில் மாணவர்களுக்கான பிரிவில் முதல் 6 இடங்களை பொள்ளாச்சி எஸ்டிசி கல்லூரி மாணவர் விஷ்ணு 29 நிமிடம் 26 நொடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பெற்றார். இதையடுத்து ஓரிரு நிமிடங்களில் இலக்கை அடைந்த கோவை  காளப்பட்டியில் உள்ள டாக்டர் என்ஜிபி கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த கிருபாகரன் (2வது இடம்), இதே கல்லூரியை சேர்ந்த மணிகண்டன்(3வது இடம்), கோகுல் (6வது இடம்) மற்றும் கோவை விஎல்பி ஜானகியம்மாள் கலை அறிவியல்  கல்லூரியை சேர்ந்த அபிலாஷ் (4வது இடம்), இதே கல்லூரியை சேர்ந்த அருண் (5வது இடம்) இதே கல்லூரியை சேர்ந்த ரமேஷ் (6வது இடம்) பெற்றனர்.  

மாணவிகளுக்கான பிரிவில் கோபி கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த திவ்யா 37  நிமிடம் 39 நொடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பெற்றார். இதையடுத்து ஓரிரு நிமிடங்களில் கோவை நிர்மலா கல்லூரியை சேர்ந்த நிவேதா (2வது இடம்), இதே கல்லூரியை சேர்ந்த லீமா ரோசினி (5வது இடம்), சுகன்யா (6வது இடம்)  மற்றும் கோவை விஎல்பி ஜானகியம்மாள் கலை, அறிவியல் கல்லூரியை பவித்ரா (3வது இடம்), திவ்யா (4வது இடம்) பெற்றனர். இவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா இன்று மாலை 5 மணிக்கு கோபி கலை அறிவியல் கல்லூரியில் நடக்கிறது. இதில் பாரதியார் பல்கலை உடற்கல்வி இயக்குநர் ராஜேஸ்வரன் சான்றிதழ் வழங்குகிறார். அவர் கூறுகையில், ‘அகில  இந்திய அளவிலான மாரத்தான் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது’ என்றார்.

Related Stories: