பிச்சை கேட்டு பெறுவதல்ல பாரத் ரத்னா விருது: தயான்சந்த் மகன்

புதுடெல்லி: ‘பிச்சை கேட்டு பெறுவதல்ல பாரத் ரத்னா விருது’ என்று இந்திய விளையாட்டின் அடையாளமான ஹாக்கி வீரர்  தயான்சந்த் மகன் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.உலக புகழ் பெற்ற ஹாக்கி வீரர் தயான் சந்த்.  அவர் வேகத்தை, திறமையை அடையாள படுத்த ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் 4 கைகளுடன் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. தயான்சந்த் பிறந்த ஆகஸ்ட் 29ம் தேதிதான் நம்  நாட்டின் ‘தேசிய விளையாட்டு தினமாக’ கடைபிடிக்கப்படுகிறது. அவருக்கு ‘பாரத் ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. அவருக்கு வழங்காமல் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு வழங்கப்பட்டபோது கடும்  விமர்சனம் எழுந்தது. மரணத்திற்கு பிறகு பலருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தயான்சந்துக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இன்றும் தொடர்கிறது.

இந்நிலையில் தேசிய விளையாட்டு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அப்போது அவரது மகனும், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனுமான அசோக் குமார், ‘ விருதுகள் கெஞ்சி பெறுவதில்லை. விருதுகள் பிச்சை  எடுக்கப்படுவதில்ைல. அது அரசாங்கத்தால் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுவது. என் தந்தை அந்த விருதுக்கு தகுதியானவரா என்பதை இப்போதுள்ள அரசாங்கம் முடிவு செய்யட்டும்’ என்றார்.

Related Stories: