கீழடி அகழாய்வில் அடுத்தடுத்து பிரமிப்பு மனித முகம், விலங்கு முக சிற்பங்கள் கண்டெடுப்பு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 5ம் கட்ட அகழாய்வுப்பணிகள், தமிழக தொல்லியல் துறை சார்பில் ஜூன் 13ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் பெண்கள் அணியும் ஆபரணங்கள் அதிகளவில்  கிடைத்துள்ளன. கடந்த சில நாளாக தொடர்ந்த ஆய்வில் வட்ட வடிவிலான சுடுமண் காதணிகள் கண்டறியப்பட்டுள்ளன. சுடுமண் பொருட்கள் காலத்தால் அழியாதது. எளிதில் சேதமடையாதது என்பதால் பண்டைய காலத்தில் சுடுமண்  காதணிகள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன.  சங்குகளும், சங்கு வளையல்களும் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், மனித முகம், விலங்கு முகம் கொண்ட வினோதமான சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ளன. இந்த முகங்கள் அச்சிலிருந்து வார்க்கப்பட்டுள்ளது போன்று உள்ளது. மேலும் சுடுமண்ணாலான நூல் நூற்க பயன்படும் தக்கலிகள்  கிடைத்துள்ளன. இவை அனைத்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: