காருக்குள் மூச்சுத்திணறி சிறுமி சாவு

தூத்துக்குடி: தூத்துக்குடி புதுகிராமத்தை சேர்ந்தவர் ரோகித். சென்னையில் பணிபுரிகிறார். இவரது மகள் ரியானா சம்தா(2). குடும்பத்துடன் ரோகித், தூத்துக்குடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று வீட்டில்  நிறுத்தியிருந்த காரில் மயங்கிய நிலையில் ரியானா கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மருத்துவமனை செல்லும் வழியில் ரியானா இறந்தாள்.  விசாரணையில், சிறுமி திறந்திருந்த காருக்குள் விளையாட்டாக சென்று  கதவை மூடி  இருக்கிறாள். பிறகு கதவை திறக்க தெரியாததால் சிறுமி காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது.

Related Stories: