ஆழியார் அணையில் படகு சவாரி ரத்து

பொள்ளாச்சி:  பொள்ளாச்சியை அடுத்த ஆழியாருக்கு உள்ளூர் சுற்றுவட்டார பகுதியிலிருந்தும்  திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், பழனி, கேரள உள்பட வெளியூர்களில் இருந்தும்  அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆழியாருக்கு வரும்  பயணிகள் அணையின் நீர்தேக்க பகுதியை பார்வையிட்டும், சிறுவர் முதல்  பெரியவர்கள் வரை படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில் நேற்று முன்தினத்திலிருந்து தொடர்  விடுமுறையொட்டி நேற்று ஆழியாருக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை  அதிகமாக இருந்தது. ஆழியார் அணைக்கு சுற்றுலா வந்த பயணிகளில் பலரும்  படகு சவாரி செய்யலாம் என்று அணைப்பகுதிக்கு வந்தனர். ஆனால் படகு சவாரி ரத்தால் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன்  திரும்பி சென்றனர்.

Related Stories: