குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரிப்பு... சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

தென்காசி: குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது. குற்றாலத்தில் சீசன் நிறைவு கட்டத்தை எட்டி வருகிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும். இதில் இந்த ஆண்டு ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதங்கள் சீசன் சுமாராக இருந்தது. பெரும்பாலான நாட்கள் இல்லை. ஆனால் ஆகஸ்ட் மாதம் துவக்கத்தில் இருந்தே சீசன் நன்றாக உள்ளது. சாரலும் நன்றாக பெய்கிறது. இதமான சூழல் நிலவுகிறது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது.

மெயினருவியில் இன்று காலை ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. குற்றாலம் சீசன் நிறைவு பெறுவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தாமதமாக சீசன் களைகட்டி காணப்படுகிறது. விடுமுறை தினம் என்பதால் இன்று சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: