திருச்செந்தூர் கடலில் குளிக்க அனுமதி

திருச்செந்தூர்: தென்மேற்கு வங்கக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்ததால், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. மேலும் திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்கவும் 3 நாள் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை 23ம் தேதி இரவு வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் நேற்று காலை 7 மணி முதல் திருச்செந்தூர் கடலில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: