மேற்குவங்கத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்து பலியான 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி: மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலம் கச்சுவா பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது, வடக்கு 24 பர்கானாவில் கோவில் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில் கச்சுவா பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சியை காண்பதற்காக ஏராளமானோர் இன்று கூடியிருந்தனர். அப்போது கோவில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 4 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். அவர்கள் உடனடினயாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார்.

Related Stories: