பால் விலையை சிறிது சிறிதாக ஏற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு தமிழிசை யோசனை

நெல்லிக்குப்பம்: ‘‘முகவர்களுக்கு ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் பால் விலையை உயர்த்ததான் வேண்டும். விலையை ஒரேயடியாக ஏற்றாமல் சிறிது சிறிதாக ஏற்றினால் மக்களுக்கு பளு தெரியாது’’  என்று தமிழக அரசு தமிழிசை யோசனை தெரிவித்திருக்கிறார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொள்ள வந்த பாஜக மாநில தலைவர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் இணைந்து வருகின்றனர். ஒருவரை ஒருவர் குறை சொல்வதை நிறுத்திவிட்டு மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதுதான் எனது ஆசை. பால் முகவர்களுக்கு ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் பால் விலையை உயர்த்ததான் வேண்டும்.

Advertising
Advertising

பால் விலையை ஒரேயடியாக ஏற்றாமல் சிறிது சிறிதாக ஏற்றினால் மக்களுக்கு பளு தெரியாது என தமிழக அரசை கேட்டு கொள்கிறேன். காஷ்மீர் நம் நாட்டு அங்கம் கிடையாது என எப்படி சொல்லலாம். பாக்கிஸ்தான்காரன் நமது நாட்டை ஆக்கிரமிப்பதை நாம் சரி என சொல்ல முடியுமா?. நமது நாட்டின் ஒருபிடி மண்னைகூட மற்றவர்கள் எடுத்து செல்ல கூடாது என எண்ணி ராணுவவீரர்கள் எல்லைப் பகுதியில் போராடி வருகின்றனர். மயிலாடுதுறையை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.  மாவட்டங்களை பிரிப்பதில் நிர்வாக ரீதியாக தவறில்லை. பிரிப்பதால் சமுக ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் மக்களுக்கு பயன் தருவதாக இருக்க வேண்டும்.  இவ்வாறு தமிழிசை கூறினார்.

Related Stories: