ஆட்டோமொபைல்,..வருகிறது பஜாஜ் பல்சர் 125

பல்சர் 150 பைக் மிக நீண்டகாலமாக வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற மாடலாக வலம் வருகிறது. இந்நிலையில், விற்பனையை அதிகரிக்கும் விதமாக, பல்சர் வரிசையில் 125 சிசி மாடலை அறிமுகப்படுத்தி இருக்கிறது பஜாஜ்  நிறுவனம். பல்சர் 150 மாடலின் டிசைன் அம்சங்களுடன் பல்சர் 125 மாடல் வந்துள்ளது. ஒட்டுமொத்த தோற்றத்தில் பல்சர் 150 பைக் போலவேதான் இருக்கிறது பல்சர் 125சிசி மாடல். ஆனால், பெட்ரோல் டேங்க் கவுல் உள்ளிட்டவை  இடம்பெறவில்லை. பெட்ரோல் டேங்க், ஹெட்லைட் ஹவுசிங், கிராப் ரெயில் மற்றும் ரிம் ஆகியவற்றில் பிரத்யேக வண்ணம் தீட்டப்பட்டு இருப்பது இதன் முக்கிய அம்சம் ஆகும். புதிய பஜாஜ் பல்சர் 125 சிசி மாடலில் 124.4 சிசி இன்ஜின்  பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 12 பிஎஸ் பவரையும், 11 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க்குகளும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் 80/100/17 அளவுடைய டயர், பின்சக்கரத்தில் 100/90/17 டயர் பொருத்தப்பட்டுள்ளன.  இந்த பைக்கின் ஸ்டான்டர்டு மாடலில் முன்சக்கரத்தில் 170 மிமீ டிரம் பிரேக், பின்சக்கரத்தில் 130 மிமீ டிரம் பிரேக் உள்ளன. டிஸ்க் பிரேக் மாடலில் முன்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக், பின்சக்கரத்தில் டிரம் பிரேக் உள்ளன. காம்பி பிரேக்கிங்  சிஸ்டமும் உள்ளது. இந்த பைக்கில் கிளிப் ஆன் ஹேண்டில்பார், அதிர்வுகளை குறைக்கும் கவுன்டர் பேலன்சர் மற்றும் கிக் ஸ்டார்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. இதன் ஸ்டான்டர்டு மாடல் 64,000 எக்ஸ்ஷோரூம்  விலையிலும், டிஸ்க் பிரேக் மாடல் 66,618 எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. பல்சர் 150 மாடலைவிட 5,000 குறைவான விலையில் வந்துள்ளது.

Related Stories: