சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,000 கன அடியில் இருந்து 23,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.80 அடி; அணையின் நீர் இருப்பு 82.45 டிஎம்சியாக இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 25,000 கன அடியில் இருந்து 28,000 கன அடியாக அதிகரித்துள்ளது.