நடிகர் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை:  நடிகர் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்பதை கடந்த தேர்தல் முடிவுகள் கூறுவதாகவும், அவரை நடிகராகவே மக்கள் பார்க்கிறார்கள் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் எச்.எம்.எஸ். காலனி அருகே  39 லட்சத்து 55ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

Advertising
Advertising

அதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது: மதுரையை சுற்றியுள்ள 1535 கண்மாய்கள், குளங்கள், குடிமராத்து பணிகள் மூலம் தூர்வாரப்படுவதாகவும், அதே போல் மதுரை மாநகரில் உள்ள தெப்பக்குளங்களும் மழைக்காலத்தில் மழைநீரை சேமிக்கும் வகையில் தூர்வாரப்படும் எனவும் கூறினார். மேலும் நடிகர் கமலஹாசன் சினிமாவில் தான் முதல்வர் ஆக முடியும்.

கமலஹாசனை ஒரு மிளிரும் நட்சத்திரமாகவும் ஒரு நடிகராக மட்டும்தான் மக்கள் பார்க்கிறார்கள்,  அவரை இன்னும் மக்கள் பிரதிநிதியாக மக்கள் தலைவராக   ஏற்றுக்கொண்டு  இருக்கிறார்கள் என்றால் இப்போது நடந்து முடிந்த தேர்தலை பொறுத்தவரை இல்லை என்று இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: