போர்ட் ஆப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிரினிடாட்ம், குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்தது. டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணியில் காட்ரெல், தாமசுக்கு பதிலாக கீமோ பால், பேபியன் ஆலன் இடம் பெற்றனர். இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு பதிலாக சாஹல் சேர்க்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர்களாக கிறிஸ் கேல், எவின் லூயிஸ் களமிறங்கினர். பலத்த மழையால் ஆட்டம் 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை எடுத்தது.