மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா விவசாயிகளின் கடன்களை திருப்பி செலுத்த அவகாசம் தேவை: ரிசர்வ் வங்கிக்கு ராகுல்காந்தி கடிதம்

புதுடெல்லி: மழை வெள்ளம் பாதித்த கேரள விவசாயிகளின் பயிர்க்கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை வரும் டிசம்பர் 31 வரை நீடிக்க ரிசர்வ் வங்கிக்கு ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

 கேரளா மாநிலத்தில் பெய்த கனமழைக்கு நேற்று வரை 103 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பியுமான ராகுல்காந்தி கடந்த 12ம் தேதி தனது தொகுதியை சேர்ந்த புதுமலை உள்ளிட்ட  வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசுக்கு ராகுல்காந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு பெய்த கனமழை காரணமாக விவசாயிகள் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாத  நிலையில் உள்ளனர். இது தவிர சொத்துக்களும் பாதிப்படைந்துள்ளன.  கேரளா மாநில அரசும் பல்வேறு எதிர்க்கட்சிகளும் விவசாயிகளின் கடனை திருப்பி செலுத்துவதற்கான காலஅவகாசத்தை நீடிக்க ேகாரிக்கை விடுத்திருந்தன. ஆனால்  இந்த கோரிக்கையை மாநில அளவிலான வங்கிக்குழு பரிசீலனை செய்ய மறுத்துவிட்டது. எனவே ரிசர்வ் வங்கி கவர்னர், விவசாயிகள் தங்களது பயிர்க்கடனை திருப்பி செலுத்துவதற்கான காலஅளவை டிசம்பர் 31 வரைநீடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேரளாவுக்கு உதவ தமிழக மக்களிடம் முதல்வர் கோரிக்கை

கேரள முதல்வர் பினராய் விஜயன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழக மக்கள் முடிந்த அளவு நிதியுதவி அளித்து கைக்கொடுக்க வேண்டும் என்று டிவிட்டர் பதிவில் தமிழில் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு தமிழக மக்கள்  பலர் ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

Related Stories: