சந்திரசூடேஸ்வரர் கோயில் குளத்தை தூர்வார கோரிக்கை

ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் குளத்தை தூர்வார வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓசூர் தேர்பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான பச்சை குளம் உள்ளது. இந்த குளத்தில் சந்திரசூடேஸ்வரர் தேர் திருவிழாவின் போது தெப்ப திருவிழா நடக்கிறது. இதை காண ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

தெப்ப விழா நிகழ்ச்சியில் பக்தர்கள் மிளகு, உப்பு ஆகியவற்றை தெப்பத்தில் கரைத்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம். மேலும், அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் நடந்த வரலட்சுமி பூஜையின் போது பக்தர்கள் மாலைகள் உள்ளிட்ட பொருட்களை குளத்தில் விட்டு பூஜை செய்ததால், குளம் மாசடைந்து கடும் துர்நாற்றம் வீசிவருகிறது. எனவே, குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: