பரமக்குடி-பார்த்திபனூர் சாலையில் அரசு பஸ்சில் சாகச பயணம்

பரமக்குடி: பரமக்குடியில் படிக்கும் மாணவர்கள் போதிய பஸ் வசதி இல்லாததால், சாகச பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் கூடுதல் பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகராக பரமக்குடி உள்ளது. பரமக்குடியை சுற்றிலும் 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதனால் பள்ளி மேற்படிப்பு மற்றும் கல்லூரி படிப்பதற்காக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பரமக்குடி வந்து செல்கின்றனர். இந்நிலையில் பல கிராமங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு போதுமான பஸ் வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பரமக்குடி முதல் பார்த்திபனூர் வரை வந்து செல்லும் நகர் பஸ்களில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் உயிரை பணயம் வைத்து தினமும் சாகச பயணம் மேற்கொள்கின்றனர். பார்த்திபனூர் முதல் பரமக்குடி வரை 25 கிராமங்கள் உள்ளது. இங்கு உள்ள மாணவ,மாணவியர் பஸ் வசதி இல்லாததால் காலை 7 மணிக்கே பேருந்து நிறுத்தங்களில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர்.இந்த நேரத்தில் வீரசோழத்திலிருந்து பரமக்குடி வரும் பஸ் மட்டுமே பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு வசதியாக இருக்கிறது. இதனால், தினமும் பஸ்சின் படிக்கட்டு மற்றும் பஸ் மேல்புறந்தில் அமர்ந்து வருகின்றனர். சில நாட்களில் பஸ்சின் பின்புறம் உள்ள ஏணி படியில் தொடங்கிய படி உயிருக்கு பயந்து கொண்டு பயனம் செய்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் படிக்கட்டில் தொங்கிய படி வந்த மாணவர் தவறி விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். இதுகுறித்து போக்குவரத்து துறை அலுவலகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆகையால் பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்களின் வசதிக்காக தினமும் காலை,மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: