மஞ்சளாறு அணையை தூர்வார கோரிக்கை

வத்தலக்குண்டு: மஞ்சளாறு அணையை தூர்வாராததாலும், நீர் பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்புக்குள்ளானதாலும் போதிய அளவில் நீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் மஞ்சளாறு அணை உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 57 அடியாகும். 487 மில்லியன் கனஅடி தண்ணீர் கொள்ளளவு கொண்டதாகும்.  தற்போது அணையில் 25 அடி உயரத்திற்கு வண்டல் மண்தேங்கி கிடக்கிறது. மேலும் அணையின் நீர் தேக்க பகுதி ஆக்கிமிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் அணையில் போதிய அளவில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது.

இதன் காரணமாக பாசனத்துக்கு நீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். தற்போது அணையில் குறைந்த அளவில் தண்ணீர் உள்ளதால் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே அணை நீர் தேக்க பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அணையை தூர்வார விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: