அத்திவரதர் உற்சவத்தின் 20-வது நாள் : பக்தர்கள் கூட்டம் குறைந்தது

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க கடந்த சில நாட்களாக கூட்டம் அலைமோதிய நிலையில் விடுமுறை தினமான இன்று கூட்டம் குறைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோயிலுடைய அத்திவரதர் உற்சவம் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் தொடங்கி 20 நாட்களாக நடைபெற்று வருகின்றது.

நாள்தோறும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேற்பட்டோர் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கிடையில் வார இறுதியில் சுமார் 3 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் விடுமுறை தினமான இன்று ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டம் குறைந்ததாக கூறப்படுகிறது.

காரணம் கடந்த 2 நாட்களாக அத்திவரதர் தரிசனத்திற்கு பலலட்சம் பக்தர்கள் வந்துக்கொண்டு  இருந்தார்கள், அந்த கூட்டத்தில்   ஏற்பட்ட நெரிசலில் 5 பேர் மூச்சி திணறி உயிரிழந்தனர். இந்நிலையில் சனிக்கிழமையான இன்று ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று போலீஸ் பாதுகாப்பை அதிகரித்து, பலவேறு இடங்களில் தடுப்புகளை ஏற்படுத்தி   பொறுமையாக அத்திவரதரை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. காலை முதல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த அத்திவரதர் தரிசனம், தற்போது கூட்டம் குறைந்து பக்தர்கள் வேகமாக மகிழ்ச்சியுடன் சென்றுக்கொண்டு இருக்கிறார்கள். சிறப்பு தரிசனத்திற்கு கூட மக்கள் கூட்டம் குறையவாகவே காணப்படுகிறார்கள் என்று கூறப்படுகின்றது

Related Stories: