டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

டெல்லி: டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார். டெல்லி முதலமைச்சராக 3 முறை பதவி வகித்தவர் ஷீலா தீட்சித். 1938-ம் ஆண்டு மார்ச் 31-ல் பிறந்த ஷீலா தீட்சித் பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவை சேர்ந்தவர். 81 வயதான ஷீலா தீட்சித் உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

Advertising
Advertising

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக ஷீலா தீட்சித் பதவி வகித்து வந்தார். 1998 முதல் 2013 வரை 15 ஆண்டுகள் டெல்லி முதல்வராக பதிவி வகித்தவர் ஷீலா தீட்சித். 2014-ம் ஆண்டில் கேரள ஆளுநராகவும் சில மாதங்கள் பணியாற்றினார். ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வடகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

தலைவர்கள் இரங்கல்

* ஷீலா தீட்சித் மறைவு டெல்லிக்கு பேரிழப்பு; அவரின் பங்களிப்பு என்றும் நினைவுக்கூறப்படும் என டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

* டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித் மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல்; 3 முறை முதல்வராக இருந்த ஷீலா தீக்‌ஷித் தன்னலமின்றி பணியாற்றியவர்; ’தனது அன்பான மகளை காங்கிரஸ் கட்சி இழந்துவிட்டது’ என கூறியுள்ளார்.

* டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்; டெல்லியின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியவர் ஷீலா தீட்சித் என கூறியுள்ளார்.

* டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

* காங். மூத்த தலைவர் ஷீலா தீட்சித் மறைவுக்கு, ராஜ்நாத் சிங், வைகோ, ஒமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: