பிரதமரின் அமெரிக்க பயணத்தில் ஹூஸ்டனில் ‘ஹவ்டி மோடி’

ஹூஸ்டன்: அமெரிக்க பயணத்தின்போது, வரும் செப்டம்பர் 22ம் தேதி பிரதமர் மோடி ஹூஸ்டன் நகரில் இந்தியர்கள் மத்தியில் பேச இருக்கிறார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா.வின் பொதுச்சபை கூட்டம் வரும் செப்டம்பர் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. அதில், பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். ஹூஸ்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் செப்டம்பர் 22ம் தேதி அவர் உரையாற்ற இருக்கிறார்.இதற்காக, ஹூஸ்டனைச் சேர்ந்த டெக்சாஸ் இந்தியா அமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு, அமெரிக்க வாழ் இந்தியர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இம்மாநாட்டுக்கு ‘ஹவ்டி மோடி!’ என பெயரிடப்பட்டுள்ளது.

Advertising
Advertising

‘ஹவ்டி’ என்பது, ‘ஹவ் டூ யு டூ?’ (நலமாக இருக்கிறீர்களா?) என்பதன் சுருக்கமாகும். அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதிகளில் நண்பர்கள் சந்தித்து கொள்ளும்போது நலன் விசாரிக்க, சுருக்கமாக ‘ஹவ்டி’ என கூறுவது வழக்கமாகும்.இந்நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வருவார்கள் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதற்கான அனுமதி இலவசமாகும்.

Related Stories: