ஆகம விதிகளுக்கு உட்பட்டு அத்திவரதர் தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும்: தமிழக பாஜக தலைவர் வலியுறுத்தல்

சென்னை: “ஆகம விதிகளுக்கு உட்பட்டு அத்திவரதர் தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கை: 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளியிருக்கும் அத்திவரதரை தரிசிக்க நாள் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். பக்கத்துக்கு மாநிலத்தை  தாண்டி இப்போது வெளிநாடு வாழ் மக்களும் வர ஆரம்பித்து இருக்கிறார்கள். ஆனால் மக்கள்  கூடும் கூட்டத்திற்கான முன் ஏற்பாடுகள் இல்லாததால் மக்கள் தினம் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாவட்ட நிர்வாகம், மாநில  நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தாலும் இது நாளுக்கு நாள் பெருகி வரும் கூட்டத்திற்கு போதுமானதாக இல்லை.

Advertising
Advertising

மக்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. தினம், தினம் பொதுமக்கள் தொடர்பு கொண்டு அதிக வசதிகள் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள். எனவே, தெற்கு மாட வீதியில் பக்தர்களுக்கு தேவையான தங்குமிட வசதி செய்து தர வேண்டும். பக்தர்களுக்கு வேண்டிய அளவிற்கு  பக்தர்கள்  நின்று கொண்டிருப்பது எந்த இடமாக இருந்தாலும் குடிதண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பக்தர்கள் கொண்டு செல்லும் பொருள்களுக்கு பாதுகாப்பு வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். கோவில் வளாகத்திற்குள் தரிசனத்தின் நேரடி ஒளிபரப்பைக் காணொளி திரைகள் மூலமாக ஒளிபரப்பினால் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பேருதவியாக இருக்கும். நேரத்தின் கடினம் தெரியாமல் இருக்கும். அதேபோல் ஆகம விதிகளுக்கு உட்பட்டு தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும்.

Related Stories: