டெல்லியில் இருந்து டொரான்டோவுக்கு நேரடி விமான சேவை

துபாய்: அரசின் ஏர் இந்தியா விமான நிறுவனம், உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27ம் தேதி முதல் டெல்லியில் இருந்து கனடாவின் தலைநகர் டொரான்டோவுக்கு நேரடி விமான சேவையை துவக்க உள்ளது.கடன் சுமையால் திண்டாடுவதால் ஏர் இந்தியாவை விற்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், வெளிநாட்டிற்கு புதிய விமான சேவையை ஏர் இந்தியா துவக்க உள்ளது. நைரோபி, கென்யா ஆகிய நாடுகளுக்கும் வரும் அக்டோபரில் புதிய விமான சேவையை துவக்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விமானங்களை இயக்குவதற்கு ஆகும் செலவைக் குறைப்பதன் மூலம் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் அக்டோபரில் போபால் - பெங்களூரு இடையே புதிய விமான சேவையை துவக்கவும் திட்டமிட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: