கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேனி: கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும் மற்றும் குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக இந்த வைகை அணையானது விளங்கி வருகிறது. இதை தொடர்ந்து நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாத காரணத்தால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 27 அடியாக குறைந்துள்ளது. மேலும் இந்நிலையில் கடந்த சில தினங்களாக கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

மேலும் இதை தொடர்ந்து இங்கிருந்து வினாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அணையில் நீர்வரத்து வினாடிக்கு 30 கனஅடியாக உள்ள நிலையில் தற்போதைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 27.85 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 291 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது. மேலும் இதை தொடர்ந்து கேரளாவில் தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் வைகை அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: