காரைக்குடியில் தேசிய செஸ் ஜூலை 19ல் தொடக்கம்

சென்னை: காரைக்குடியில் 46 வது தேசிய மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜூலை 19 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து போட்டியை நடத்தும் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி தாளாளர் எஸ்பி குமரேசன், அகில இந்திய கூட்டமைப்பின் துணைத்தலைவர் டிவி சுந்தர் ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய அளவிலான 46வது செஸ் போட்டி காரைக்குடியில் உள்ள செட்டிநாடு பள்ளியில் நடைபெற உள்ளது. போட்டிகள் ஜூலை 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும்.

இந்த போட்டியில் மகளிர் கிராண்ட் மாஸ்டர்கள், சர்வதேச மாஸ்டர்கள் சௌமியா சாமிநாதன் விஜயலட்சுமி, ஆர்த்தி ராமசாமி, மீனாட்சி சுப்பராமன் நந்திதா, வர்ஷினி , பக்தி குல்கர்னி உட்பட 106 பேர் விளையாட உள்ளனர். மிழ்நாட்டிலிருந்து 18 பேர் பங்கேற்கின்றனர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ₹4 லட்சம், 2வது பரிசாக ₹3 லட்சம், 3வது பரிசாக இருவருக்கு தலா ₹2 லட்சம் என மொத்தம் ₹15 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. நினைவுப் பரிசுகளும் அளிக்கப்படும். போட்டிகளை நேரடியாக ஒளிபரப்ப வசதியாக டிஜிட்டல் போர்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக 21 டிஜிட்டல் போர்டுகள் பயன்படுத்த உள்ளோம்.

Related Stories:

>