சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கோழி உட்பட பண்ணைகளில்  வளர்க்கப்படும் பறவைகளுக்கு மக்காச் சோளத்தில் தயாரிக்கப்பட்ட தீவனம் முக்கிய உணவாக கொடுக்கப்படுகிறது. இதே போல் கால் நடைகளுக்கு தாயாரிக்கப்படும் தீவனத்திலும் மக்காச் சோளம் முக்கிய பங்கு வகிக்கின்றது. பெரம்பலூர்  மாவட்டத்தில் மக்காச்சோள பயிர் பெரும்பாலும் மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில பகுதிகளில் குறைந்த பரப்பில் இறவை பயிராகவும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது பருவமழை பெய்யாத காரணத்தால்  மானாவாரி பயிர் சாகுபடி இன்னும் தொடங்கப்படாத நிலையில் உள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அமெரிக்க படைப்புழு தாக்குதலால் நாடு முழுவதும் சோளத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்,சோளத்துக்கு கடும்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோழி தீவனத்தில் 47% சோளம்தான் உள்ளது. தமிழகத்தில் கோழிப் பண்ணையில் சோளத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தீர்க்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  குறிப்பிட்டுள்ளார். மேலும், சோளத்தின் விலை உயர்வால் கோழிப் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோழிப் பண்ணையாளர்கள் நலனைக் கருத்தில் கொண்டு சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி  கடிதத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க படைப்புழு:

இந்தப்புழுவின் தலைப்பகுதியில் ஒய் என்ற ஆங்கில எழுத்தை தலைகீழாக எழுதியது போன்றும், வால்பகுதியில் சதுர வடிவில் 4புள்ளிகள் போன்றஅமைப்பும் காணப்பட்டால் இது அமெரிக படைப்புழுவின் அடையாளமாகும். 

Related Stories: