உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அக்டோபர் 31 வரை கால அவகாசம் தேவை : தமிழக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு

புதுடெல்லி: உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அக்டோபர் 31 வரை கால அவகாசம் தேவை என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி

 கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களை கூறி தற்போது வரை மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து ஒத்திவைத்து வருகிறது. இதில் தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தரப்பில் ஆர்எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு மட்டும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் உள்ளது.  இந்த நிலையில், வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

அதில் கூறியிருப்பதாவது: உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் 2018 ஜனவரி மாதம் தொகுதி வரையறை செய்யும் பணிகள் நிறைவடையும் எனவும், அதன் அடிப்படையில் உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என கூறியிருந்தது. ஆனால் அந்த வாக்குறுதியை மாநில தேர்தல் ஆணையம் இதுவரை நிறைவேற்றவில்லை.எனவே தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்லை அடுத்த 10 நாட்களில் உடனடியாக நடத்த ஆணைய பிறப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து வழக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.  

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த கால தாமதம் ஏன் ?

இந்த நிலையில் தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசுக்கு சரமாரி கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் கொண்ட விவரங்களை எழுத்துப்பூர்வ பிரமாண பத்திரமான அடுத்த 2 வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்து அடுத்த விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தமிழக தேர்தல் ஆணையம் பதில் மனு

இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையத்தின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பதில் மனுவில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுகளுடைய செயல்பாடுகள் மற்றும் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் நிலவி வரும் வறட்சி ஆகிய 2 முக்கிய பிரச்சனைகள் காரணமாக தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை,என்று எழுத்துப்பூர்வாமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31ம் தேதி வரை தமிழக தேர்தல் ஆணையம் மனுவில் அவகாசம் கோரியுள்ளது.

Related Stories: