அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் அதிகரிப்பு

புதுடெல்லி: சர்வதேச பொருளாதார காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து புதன் கிழமை வர்த்தக நேர முடிவில் இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் குறைந்து 68 ரூபாய் 58 காசுகளாக நிறைவடைந்தது. மேலும் இந்நிலையில் இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் இந்திய ரூபாய் மதிப்பு 25 காசுகள் வரை அதிகரித்து 68 ரூபாய் 33 காசுகளாக இருந்தது. மேலும் இதனை தொடர்ந்து அமெரிக்காவின் மத்திய ரிசர்வ் அமைப்பின் தலைவர் ஜெரோம் போவல் இம்மாத இறுதியில் வட்டி விகிதங்களை குறைப்பதற்கான எதிர்பார்ப்பை வலுப்படுத்தினார். மேலும் அதன் காரணமாக வளர்ந்து வரும் சந்தைகளின் பண பாதிப்புடன் சேர்த்து இந்திய ரூபாயின் மதிப்பும் தற்போது உயர தொடங்கியது.

இருப்பினும் கச்சா எண்ணெய் விலை உயர்வு இதனால் வரும் ஆதாயங்களை மறைத்துள்ளது. மேலும் இதனை தொடர்ந்து தொடர்ச்சியான வெளிநாட்டு நிதி வெளியேற்றம், மற்றும் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலையை நிலைப்படுத்துதல் மற்றும்  சர்வதேச பொருளாதார காரணங்கள் உள்ளிட்ட காரணங்களால் இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததாக தெரிகிறது. மேலும் இதனையடுத்து தற்போதைய நிலவரப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் அதிகரித்து 68 ரூபாய் 42 காசுகளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: