உலக கோப்பை கபடி ஜூலை 20ல் தொடக்கம்: சோனியில் நேரடி ஒளிபரப்பு

மும்பை: உலக கோப்பை கபடி போட்டித் தொடர்  மலேசியாவில் ஜூலை 20ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில்  இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட ஆண்கள் பிரிவில் 32 அணிகளும், பெண்கள் பிரிவில் 16 அணிகளும் பங்கேற்கின்றன. இரு பிரிவிலும் இந்தியா களமிறங்குகிறது.

உலகின் 5 கண்டங்களில் உள்ள நாடுகளும் உலக கோப்பை கபடியில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.  உலக கோப்பை கபடி போட்டிகளை இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் உட்பட 8 நாடுகளில் ஒளிபரப்பும் உரிமையை  சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை வருவாய் அலுவலர் ராஜேஷ் கவுல் கூறுகையில், ‘கபடி நாட்டின் பாரம்பரிய மற்றும் புகழ்பெற்ற விளையாட்டு. எனவே சர்வதேச கபடி போட்டிகளை எங்கள் நெட்வொர்க் மூலம் இந்தியாவில்  ஒளிபரப்புவது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

Related Stories: