தமிழகத்தில் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு அதிரடி

சென்னை: தமிழகத்தில் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறுவதாவது; மகேஷ்குமார் அகர்வால் ஏடிஜிபி பதவி உயர்வு பெற்று போலீஸ் ஆபரேசன் துறைக்கும், வெங்கட்ராமன் ஏடிஜிபபி பதவி உயர்வுடன் சைபர் கிரைம் துறைக்கும் குற்ற ஆவண காப்பக டிஜிபி கரண் சின்ஹா , பயிற்சி கல்லூரி டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் திருச்சி சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். நஜ்மல், அன்பு,பிரேம் ஆனந்த், வனிதா ஆகியோருக்கு ஐஜியாக பதவி உயர்வு வழங்கிபோதைப்பொருள் தடுப்பு ஏஸ்பி ஆனிவிஜயா, மனித உரிமை ஆணைய எஸ்பி சத்யபிரியா ஆகியோருக்கு டிஐஜி பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

13 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு;

* மகேஷ்குமார் அகர்வால் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று போலீஸ் நிர்வாக துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

* வெங்கட்ராமன் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று சைபர் கிரைம் ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார்.

* மாநில குற்ற ஆவண காப்பக ஏ.டி.ஜி.பி.யாக வினித் தேவ் வான்கடே நியமிக்கப்பட்டுள்ளார்.

* சேலம் மாநகர ஆணையராக செந்தில்குமார் நியமனம்.

* ஐ.ஜி.யாக உயர்வு பெற்றுள்ள பிரேம் ஆனந்த் சின்ஹா சென்னை நகர(தெற்கு) கூடுதல் ஆணையராக நியமனம்.

* ஐ.பி.எஸ்.அதிகாரி வனிதா சென்னையில் ரயில்வே துறையில் போலீஸ் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* ஐ.பி.எஸ். அதிகாரி டி.எஸ்.அன்பு சென்னையில் காவல் நிர்வாக ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

* ஐ.ஜி.யாக பதவி உயர்வு அளிப்பப்பட்டுள்ள நஜ்மல் ஹோடா தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக நியமனம்.

* தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி மகேந்திரகுமார் ரத்தோடுக்கு பதவி உயர்வு.

* ஐ.பி.எஸ். அதிகாரி அபினவ்க்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக நியமனம்.

* ஐ.பி.எஸ்.அதிகாரி ரூபேஷ்குமார் மீனா பதவி உயர்வு அளிக்கப்பட்டு ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக நியமனம்.

* ஐ.பி.எஸ். அதிகாரி ஆனி விஜயவாவுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு மதுரை சரக டி.ஐ.ஜி.யாக நியமனம்.

* எம்.சத்தியப்பிரியாவுக்கு பதவி உயர்வு அளித்து போலீஸ் பயிற்சி கல்லூரியில் டி.ஐ.ஜி.யாக நியமனம்.

13 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்;

* கரண் சின்ஹா காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னை சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.ஆக கே.சங்கர் நியமனம்.

* ஸ்ரீ ஸ்ரீதர் காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி.யாக நியமனம்.

* சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக ஈஸ்வர மூர்த்தி நியமனம்.

* சென்னை பெருநகர வடக்கு மண்டல இணை ஆணையராக கபில்குமார் சரத்கர் பணியிட மாற்றம்.

* வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக என்.காமினி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

* சேலம் சரக டி.ஐ.ஜி.யாக பிரதீப்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

* திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக வி.பாலகிருஷ்ணன் நியமனம்.

* திருச்சி; சமூகநீதி, மனித உரிமைகள் பிரிவு டி.ஐ.ஜி. ஆகிறார் லலிதா லட்சுமி.

* சென்னை பெருநகர (தெற்கு) போக்குவரத்து போலீஸ் இணை ஆணையராக எஜிலிரசானே நியமனம்.

* ஆர்.சுதாகர் சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக நியமனம்.

* எம்.வி.ஜெய கவுரி சென்னை போக்குவரத்து உதவி ஆணையராக நியமனம்.

* என்.கண்ணன் நுண்ணறிவு பிரிவு துணை ஆய்வாளராக நியமனம்.

Related Stories: