ஐ.எஸ். பயங்கரவாதிகள் 155 பேர் இதுவரை கைது: மக்களவையில் கிஷன் ரெட்டி தகவல்

டெல்லி: ஐ.எஸ். பயங்கரவாதிகள் 155 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தொடரில்  கேட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். இதில் குறிப்பிடுவன;  ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஐ.எஸ். அமைப்பு சமூக வலைதளங்களில் தங்களின் கொள்கைகள், சித்தாந்தங்களை பல்வேறு வழிகளில் பரப்பி வருகின்றன . அவற்றை தடுக்கும் முயற்சியில் சைபர் கிரைம் போலீசாரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த இயக்கத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் சேர்ந்து பயங்கரவாத பயிற்சி பெற்று வருகின்றனர். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பாதுகாப்பு படையினர் சிறப்பான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையால்தான் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் மாநில போலீசாரின் உதவியுடன் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 155 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: