காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் மேகதாது திட்டம் பற்றி விவாதிக்க கோரிய கர்நாடகத்துக்கு தமிழக அரசு கண்டனம்

புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணைய 4வது கூட்டத்தில் மேகதாது திட்டம் பற்றி விவாதிக்க கோரிய கர்நாடகத்துக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பையும் உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறும் வகையில் மேகதாது அணை திட்டம் உள்ளதாக தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தமிழக அரசு, கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை என்று கூறியுள்ளது.

Related Stories: