மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இனி இ டிக்கட் கட்டாயம்

புதுடெல்லி: பெரிய நகரங்களில் உள்ள மால்களில் இயங்கும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மின்னணு டிக்கெட் வழங்க வேண்டும் என்று கடந்த வெள்ளியன்று மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பல திரையரங்குகளில் பழைய முறையில் பல வண்ணங்களில் டிக்கெட் வழங்குவது தொடர்வதால், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடக்கிறது. இதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இ டிக்கட் முறை, ஓரிரு மாதங்களில் தனி திரையரங்குகளுக்கும் அமல்படுத்த முடியும் என்று வரி துறையைச் சேர்ந்த ஆலோசகர் ஒருவர் தெரிவித்தார்.  தொழில் - வாடிக்கையாளர் (.பி2சி) என்ற முறையில் ஜிஎஸ்டி மின்னணு இன்வாய்ஸ் முறையை அமல்படுத்த மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மாதிரி களமாக அமைந்துள்ளது. இதை முறையை பி2பிக்கும் (தொழில் - தொழில்) முறைக்கும் (மின்னணு இன்வாய்ஸ்) மாற்றுவதற்கு ஏதுவாக அமையும் என்று சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: