குளச்சலில் பைக் ஓட்டிய சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு

குளச்சல்: குமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி நாத் உத்தரவிட்டுள்ளார். போலீசார் ஹெல்மெட் அணியாதவர்கள், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோர், அதிவேகமாக பைக் ஓட்டி செல்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும், 17 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பைக் ஓட்டி சென்றால் அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் எஸ்பி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

இந்த வகையில் குளச்சல் ஏ.எஸ்.பி. கார்த்திக் மேற்பார்வையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் நேற்று குளச்சல் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது 17 வயதிற்குட்பட்ட 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பைக் ஓட்டி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, சிறுவர்களின் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பெற்றோர்கள் - சிறுவர்களுக்கும் விபத்து குறித்து போலீசார் அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் பைக்குகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.

Related Stories: